இன்று 01.01.2016 காலை 11 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தில் சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் வன்னி மாவட்டத்திற்கான இணைப்பு அலுவலகம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எம்.புஸ்பகுமார அவர்களினால் திறந்த வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலகத்தின் கணக்காளர் திரு.எஸ். பாலகுமார், புனர்வாழ்வு உதவித்திட்டப்பணிப்பாளர் திருமதி.வா.கிருபாசுதன், மாவட்ட செயலக கலாச்சார உத்தியோகத்தர் திரு. இ.நித்தியானந்தன், வன்னிமாவட்ட ஜ.தே.க உறுப்பினர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






