தாங்க முடியாத பல் வலியா??

356

Extractions-tooth-pain

அடிப்படையான ஆரோக்கிய குறிப்புகளையும், உடலில் ஏற்படும் சிலவித வலிகளுக்கு இயற்கையான மருந்துகள் பயன்படுத்துவதையும் தெரிந்துவைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.கீழே சில மருத்துவ பயன்கள் கொடுக்கப்பட்டுள்ளன, அதனை படித்து பயன்பெறுங்கள்.

சம அளவு புளி, உப்பை எடுத்துக் கசக்கி பல்வலி, பல் எகிர் வீக்கம் உள்ள இடத்தில் வைத்து வாயை மூடிக் கொண்டு இருந்தால், எச்சில் ஊறும். அதைக் கீழே துப்பிவிட வேண்டும்.இவ்விதம் காலை, பகல், மாலை மூன்று வேளையும் அரை மணி நேரம் செய்தால் பல்வலி குணமாகும்.

எந்தப் பல்லில் வலி இருக்கிறதோ அந்தப்பகுதியில் வாயினுள் சர்க்கரை வைத்துவிட்டு, 18 மிளகை நன்றாக அரைத்து (அல்லது பொடி செய்து) கால் டம்ளர் தண்ணீரில் விட்டு காய்ச்ச வேண்டும்.

காய்ச்சிய நீரை சிறிது நேரம் ஆற வைத்து விரல் சூடு தாங்கும் அளவிற்கு வந்ததும், வெளியே வலி இருக்கும் கன்னதின் பகுதியில் இந்த நீரால் நன்றாக தேய்க்க வேண்டும்.