வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி மாணவி கலைப்பிரிவில் மாவட்டத்தில் முதல் நிலை!!

1165

12490267_1029517537070046_777271076_o - Copy

வெளியாகிய உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி மாணவி செல்வி இராஜகோபால் சுதர்சினி வவுனியா மாவட்டத்தில் முதல் நிலையை பெற்றுள்ளதுடன், அகில இலங்கை ரீதியில் 70ம் நிலையை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொடிய போரால் பாதிக்கப்பட்டு, பொருளாதாரத்தில் நலிவடைந்த சமூகமாக நாங்கள் இருந்தாலும், தளராத மனநிலையுடன் கல்வியில் அக்கறை செலுத்தியதால் தான் இந்த நிலைமைக்கு உயர்ந்ததாக மாணவி சுதர்சினி தெரிவித்தார்.

சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தி பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்த செல்வி இராஜகோபால் சுதர்சினி அவர்களுக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வாழ்த்துகின்றோம் பகுதியில் உங்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்ள அழையுங்கள் 0772602904

12490267_1029517537070046_777271076_o Result