ஈரானுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொண்டது சவூதி : காரணம் என்ன?

275

Iran

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள சவூதி நாட்டுத் தூதரகத்துக்குத் தீ வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானுடனான தூதரக உறவை முறித்துக் கொள்வதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.

சவூதியில் ஷியா பிரிவு மதத் தலைவர் ஷேக் நிமர் அல்-நிமர் உள்ளிட்ட 47 கைதிகளுக்கு கடந்த சனிக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சுன்னி பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட சவூதி அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட ஷேக் நிமர் அல்-நிமரும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் ஒருவர் என சவூதி அரசு கூறியது.

இதற்கு, ஷியா பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈரான் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றது.

சவூதி அரேபியாவின் அந்தச் செய்கையைக் கண்டித்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பிற நாடுகளைச் சேர்ந்த ஷியா பிரிவினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, அங்குள்ள சவூதி தூதரகத்துக்குத் தீ வைக்கப்பட்டது.

இதையடுத்து, ஈரானுடனான தூதகர உறவை முறித்துக் கொள்வதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது. அந்த நாட்டிலுள்ள அனைத்து சவூதி தூதரக அதிகாரிகளும் திரும்பி அழைப்பட்டுள்ளனர்.

அத்துடன் சவூதியிலுள்ள ஈரான் தூதரக அதிகாரிகள் அனைவரும் 48 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.