வவுனியாவில் வடமாகாண சபை உறுப்பினர் தியாகராசாவினால் ஆலயங்களுக்கு உதவி!!

585

வடமாகாணசபை உறுப்பினர் திரு மயில்வாகனம் தியாகராசா அவர்களால் நேற்று (07.01.2015) தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் நிதியிலிருந்து வவுனியா மாவட்டத்தில் உள்ள ஆலயங்களுக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கப்பட்டது.

வவுனியா கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் பலநோக்குமண்டபத்தில் வைத்து வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களால் ஆலய மற்றும் கிராம அபிவிருத்திச்சங்க நிர்வாக சபைத்தலைவர்களிடம் இவ் ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கப்பட்டது.

இன் நிகழ்வில் வவுனியா மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம அபிவிருத்தித் திணைக்கள அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

1 2 IMG_7787 IMG_7789 IMG_7792 IMG_7795 IMG_7796 IMG_7798