நேற்றையதினம் (07.01.2016) செட்டிகுளம் பிரதேச பீடியாபாம் கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 65க்கும் மேற்பட்ட வறிய மாணவர்களுக்கான அப்பியாச புத்தகங்கள் (கொப்பி) தாய்மடி நற்பணிநிதியத்தினால் சில நலன்விரும்பிகளின் பங்களிப்புடன் வழங்கி வைக்கப்பட்டது.
பீடியாபாம் கிராம அபிவிருத்திசங்க கட்டிடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தாய்மடியின் ஸ்தாபக தலைவர் திருமதி பிறமிளா(லதா) செயலாளர் ஜனகன், செட்டிக்குள பிரதேச இணைப்பாளர் ஆனந்தராசா (ஆனந்தன்) பீடியாப்பாம் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கான அப்பியாசப் புத்தகங்களை வழங்கிவைத்தனர்.
இந்நிகழ்வின் இறுதியில் கருத்து தெரிவித்த பிறமிளா அவர்கள் கிராமப்புறங்களில் என்னும் வறுமையின் காரணமாக பாடசாலை செல்லமுடியாமல் இருக்கும் மாணவர்களுக்கு நேரடியாக உதவ விரும்பும் நல்உள்ளம் கொண்டவர்கள் எங்களை தொடர்புகொள்ளலாம் என குறிப்பிட்டதுடன் ஆர்வமுள்ளோர் 0771648522, 0775588141, 0772881910 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் கோரியிருந்தார்.






