ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசு பதவிக்கு வந்து ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு நாடளவிய ரீதியில் நடைபெற்றுவரும் மரநடுகை நிகழ்வானது இன்று வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் அதிபர் எஸ்.சுபாஸ்கரன் தலமையில் காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார கலந்துகொண்டிருந்தார். விருந்தினர்கள் பாண்ட வாத்தியம் முழங்க பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டனர். தேசியக்கொடியினை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார அவர்கள் ஏற்றிவைத்ததுடன் வவுனியா பிரதேசக் கொடியினை வவுனியா மாவட்ட பிரதேசசெயலாளர் க.உதயராசா மற்றும் பாடசாலைக்கொடியினை அதிபர் எஸ்.சுபாஸ்கரன் ஆகியோர் ஏற்றிவைத்தார்.
அதனை தொடர்ந்து மரம் நடுகை நிகழ்வை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார அவர்கள் தொடங்கி வைத்தார். தொடர்ந்து வவனியா பிரதேச செயலாளர், அரச அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் என அனைவரும் மரம் நடுகையில் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் கலந்தகொண்டு உரை நிகழ்த்திய வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார நமது நாட்டில் வனப்பகுதியானது 28 வீதம் வரை குறைந்து காணப்படுகிறது அதை 32 வீதமாக உயர்த்துவதற்கு சூழல் தொடர்பான அமைச்சரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அவர்கள் உத்தேசித்துள்ளார்.
ஆகவே மிகுதியாக இந்த நாட்டில் இருக்கும் மரங்களை வெட்டி அழிக்காது புதிதாக மரங்களை நாட்டி வனப்பகுதிகளை உருவாக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.







