வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் ஜனாதிபதியின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு நிகழ்வுகள்!!

718

ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்கள் பதவி ஏற்று இன்றுடன் ஒரு வருட பூர்த்தி விழா இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இதனை முன்னிட்டும் சூழற் தொகுதியை பாதுகாக்கும் நோக்கிலும் மாவட்டம் மற்றும் மாகாண மட்டத்தில் மரம் நடுகை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வவுனியாவில் மரம் நடும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் திரு.தர்மரட்ணம் தலைமையில் மரம் நடும் நிகழ்வு இடம்பெற்றது.

இன் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

IMG_6555 IMG_6558 IMG_6560 IMG_6561 IMG_6564 IMG_6566 IMG_6568 IMG_6572 IMG_6576