வவுனியா குருமன்காடு சந்திக்கு அருகில் இருக்கும் மீன் சந்தை நேற்று (07.01.2016) பிற்பகல் வவுனியா நகர சபை ஊழியர்களினால் அகற்றப்பட்டது.
குறித்த மீன் சந்தையின் கூரைத்தகடுகள் அனைத்தையும் நகரசபை ஊழியர்கள் அகற்றிக்கொண்டு சென்றதுடன் அவ்விடத்தில் மீன் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
கடந்த பல வருடங்களாக அப்பகுதி மக்களால் பல அதிகாரிகளுக்கு மகஜர் கையளித்ததுடன் மீன் சந்தையினை அகற்றித்தருமாறு கோரிக்கையும் விடுக்கப்பட்டது.
அருகில் இந்து மற்றும் கிறிஸ்தவ கோவில்கள் இருப்பதால் துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவித்த பொது மக்கள் அப்பகுதியால் நடமாடுவதற்கு பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.






