கஷ்டத்தினால் ஆசிரியர் வீட்டிலிருந்து கல்விகற்று வவுனியாவில் முதனிலை பெற்ற மாணவன்!!

729

1ம் இடம் செல்வன் யோகோந்திரன் யனுசன்(e-tech)result(A,B,C)

வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயத்தில் இயந்திரவியல் தொழிநுட்ப பிரிவில் மாவட்ட ரீதியில் 1ம் இடத்தைப் பெற்று வவுனியா மண்ணிக்கு பெருமை சேர்த்த யோகேந்திரன் யனுசன் அவர்கள் வவுனியா நெற் இணையத்திற்கு வழங்கிய சிறப்புச் செவ்வியில் பின்வருமாறு தெரிவித்தார்..

எனது பெயர் யோகேந்திரன் ஜனுசன். நான் வவுனியாவில் இயந்திரவியல் தொழிநுட்ப பிரிவில் மாவட்ட ரீதியில் 1ம் இடத்தை பெற்றமைக்கு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

எனது குடும்பம் மிகவும் கஸ்டப்பட்ட குடும்பம். எனது கிராமம் செட்டிக்குளம் பாடசாலையில் இருந்து 14 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ளது. அங்கிருந்து பாடசாலை வருவதற்கு பேரூந்து வசதி குறைவாக இருப்பதனால் சைக்கிள், பேரூந்து போன்றவற்றின் மிகவும் கஷ்டத்தின் மத்தியில் கல்விகற்றேன்.

வீரபுரம் மணி மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியை தொடர்ந்து தரம் 5 புலமைப்பரீட்சையில் 147 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்தேன். கா.பெ.த.சா.தர பரீட்சையில் சாதாரணமாக சித்தியடைந்த போதிலும் உயர்தரம் தொழிநுட்பப் பிரிவில் கல்வி கற்பதற்காக செட்டிக்குளம் மகா வித்தியாலயத்தில் சேர்ந்து கொண்டேன்.

எனது வீட்டில் கல்விகற்றலுக்கான சூழல் காணப்படவில்லை. எனவே எனது பழைய பாடசாலை ஆசிரியர் செ.பற்பகுணநாதன் ஆசிரியர் அவர்களின் வீட்டில் இரவு முழுவதும் நின்று எனது கஸ்டத்தின் நிலையை உணர்ந்து கல்வி பயின்றேன்.

எனது எதிர்கால இலட்சியம் சிறந்தவொரு தொழிநுட்பவியலாளராக வந்து எனது குடும்பத்தை மேம்படுத்தி எனது செட்டிக்குள பிரதேசத்திற்கு சேவை செய்வதாகும்.

எனது இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த பாடசாலை, பாடசாலை அதிபர் அவர்களுக்கும் எனது பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மேலதிக வகுப்புக்களை எடுத்து கற்பித்த ஆசிரியர்களுக்கு எனது முதற்கண் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.

சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்தி பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்த இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.