சாதிப்பதற்கு வசதியான குடும்பத்தில் பிறக்க வேண்டியதில்லை : வவுனியாவில் முதலிடம் பெற்ற மாணவன்!!

662

Sujeevan VTMMV

நடைபெற்று முடிந்த 2015ம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் சி.சுஜீவன் கணிதப் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் எமக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த 2015ம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சையில் கணித துறையில் தோற்றி மாவட்ட ரீதியில் முதல் இடத்தை பெற்றதற்கு பெருமைப்படுகின்றேன். இவ்வெற்றியை எனது குடும்பம், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பாடசாலை, முக்கியமாக எனது அண்ணனுக்கு சமர்ப்பிக்கின்றேன்.

நான் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவன். ஒரு வசதியான குடும்பத்தை சேர்ந்தவன் அல்ல. உயர்தர பரீட்சையில் படித்து வெற்றி பெறுவதற்குற்கு வசதியான குடும்பத்தில் பிறக்க வேன்டும் என்பது இல்லை எமது கடின உழைப்பு இருந்தால் போதுமானது.

இவ்வெற்றியின் மூலம் எனது வருங்காலத்தில் நான் ஒரு இலத்திரனியல் பொறியியலாளராக வந்து எனது தமிழ் சமூகத்திற்கு சேவையாற்றவே விரும்புகின்றேன்.

இவ்வெற்றியை பெற்றதற்கு காபொ.த சாதாரன தர மற்றும் உயர் தரம் ஆகியவற்றிற்கு வழிகாட்டியாக இருந்த எல்லா ஆசிரியர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.

இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகின்றோம்.