வவுனியா கணேசபுரம் சண்முகானந்தா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!(படங்கள், காணொளி)

1106

வவுனியா கணேசபுரம் சண்முகானந்தா வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று(11.01.2015) காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ் ஆர்ப்பாட்டத்தில் கிராம பொதுமக்கள், கிராம அமைப்புக்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், மாணவ மாணவிகள் ஆகியோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியா கணேசபுரம் சண்முகானந்தா வித்தியாலயத்தின் அதிபரின் இடமாற்றம் உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும், ஆங்கில மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடநெறிகளுக்கான ஆசிரியர் உடனே நியமிக்கப்பட வேண்டும், ஆசிரியர்களுக்கான விடுதி அமைத்து தரவேண்டும், பாடசாலை விளையாட்டு மைதானத்தை புனரமைத்துத் தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ப.சீலன் ( வடமாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியோக செயலாளர்), எஸ்.ஜேசுதாஸன் (கோட்டக்கல்விப் பணிப்பாளர், செட்டிக்குளம்) ஆகியோரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

DSC05446 DSC05447 DSC05448 IMG_2053 IMG_2057 IMG_2060 IMG_2061 IMG_2062 IMG_2063 IMG_2064 IMG_2067 IMG_2069 IMG_2072 IMG_2076 IMG_2077 IMG_2083