வவுனியாவில் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமும் சர்வதேச இளைஞர் தினமும்!!

1095

வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கம், கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், தமிழ் விருட்சம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த சுவாமி விவேகானந்தரின் 153 ஜனன நிகழ்வு இன்று சுத்தாந்த இந்து இளைஞர் சங்கத்திற்கு அருகில் அமைத்துள்ள சுவாமி விவேகானந்தர் சிலை அடியில் சிலையை பராமரிக்கும் ஹட்டன் நஷனல் வங்கியின் அனுசரணையில் இன்தமிழ் இனியன் எஸ்.எஸ் வாசன் தலைமையில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் நகரசபை செயலாளர் திரு.தர்மேந்திரா, மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு இ.நித்தியானந்தன், ஹட்டன் நஷனல் வங்கியின் முகாமையாளர் திரு க.நிசாந்தன், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு.ப.சத்தியசீலன், வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்க தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ), செயலாளர் மாணிக்கம் ஜெகன், சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவர் திரு.நா.சேனாதிராசா, சமுக ஆர்வலர்கள் விக்னா, யோகா, கருணாநிதி, சந்திரபத்மன், ஸ்ரீதரன், சங்கர் தியாகராசா, கோபிநாத், பாலா உட்பட சைவபிரகாச மகளிர் கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள் ,ஹட்டன் நஷனல் வங்கியின் உத்தியோகஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் ,

முதலில் சுவாமி விவேகானந்தருக்கு மாலை அணிவித்தும் ,மலர் தூவியும் வணக்கம் செய்த பின் தலைமை உரையாற்றிய எஸ்.எஸ் வாசன் அவர்கள் இன்று சுவாமி விவேகானந்தரின் ஜனன தினம் மட்டும் அல்ல இன்று சர்வதேச இளைஞர் தினமும் ஆகும் உலக நாடுகள் அந்த அளவுக்கு சுவாமி விவேகானந்தருக்கு முக்கியத்துவம் கொடுத்து உள்ளது அவர் சமய வாதி மட்டும் அல்ல சிறந்த சமுக வாதியும் ,தத்துவ ஞானியும் என்று அவர் பெருமைகளை நயம்பட உரைத்தார் ,

அதன் பின்னர் வரியிறுப்பாளர் சங்க தலைவரும், தமிழ் விருட்ச தலைவருமான சந்திரகுமார் (கண்ணன் )அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவடைய அனைவருக்கும் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தால் தேநீரும் ,சிற்றுண்டியும் வழங்கி வைக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

DSCN0280 DSCN0281 DSCN0283 DSCN0284 DSCN0287 DSCN0293 DSCN0294 DSCN0296 DSCN0299 DSCN0302 DSCN0304 DSCN0305 DSCN0307 DSCN0309 DSCN0316 DSCN0327 DSCN0331 DSCN0340 DSCN0348 DSCN0353 DSCN0357