வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொலிசாருடன் இணைந்து கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்கள் மேற்கொண்ட நடவடிக்கையில் வீதிகளில் கட்டாக்காலி மாடுகளாக திரிந்த சுமார் 66 மாடுகளை பிடித்து வவுனியா நகர சபையில் ஒப்படைத்துள்ளனர்.
கோவில்குளம், பூந்தோட்டம், பண்டாரிகுளம், கண்டி வீதி, மன்னார் வீதி போன்ற இடங்களில் வீதிகளில் படுத்திருந்த கட்டாக்காலி மாடுகளை நகரசபையினர் பிடித்துச் சென்றனர். தண்டப்பணமாக 1000 ரூபா, பிடிகூலி 600ரூபா, பராமரிப்புச் செலவு ஒருநாள் 300ரூபா என்பன செலுத்தி உரிமையாளர்கள் தமது மாடுகளை எடுத்தச் செல்லமுடியும் என்று நகரசபையின் செயலாளர் தெரிவித்தார்.






