வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டிக்கான ஆரம்ப நிகழ்வாக இன்று (14.01.2016) மாணவர்களுக்கான மாபெரும் மரதன் ஓட்டப்போட்டி நடைபெற்றது.
இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பணப் பரிசில்கள் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் ஓய்வுநிலை விரிவுரையாளர் திரு.த.ம.தெய்வேந்திரன் மற்றும் திருமதி கௌசலா சத்தியசீலன் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டன.
பெற்றோர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.






