வவுனியா புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் இன்று (14.01.2016) காலை 6.30 மணியளவில் பாரஊர்தி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியது.
வேகமாகப் பயணித்த பார ஊர்தியின் வில்லுத் தகடு உடைந்ததனால் நிலை தடுமாறிய பார ஊர்தி அருகில் இருந்த வயலுக்குள் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
இவ் விபத்தில் பார ஊர்தியின் சாரதியும் நடத்துனரும் அதிஷ்டவசமாக எவ்வித காயங்களும் இன்றி உயிர்தப்பினர்.
-துஷாந்த்-






