வவுனியாவில் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி சிறப்புப் பிரார்த்தனை!!

641

வவுனியாவில் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி ஆதிவிநாயகர் ஆலய பரிபால சபைச் செயலாளர் சிவகஜன் தலைமையில் வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.

ஆதிவிநாயகர் ஆலய பரிபாலன சபை, அந்தணர் ஒன்றியம் மற்றும் தமிழ் விருட்சம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் தியாகராஜா, முன்னாள் நகர பிதா சந்திரகுலசிங்கம் மோகன், சமூக சேவை உத்தியோகத்தர் ஸ்ரீனீவாசன், இறைபணி செம்மல் தேவராசா, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ), செயலாளர் மாணிக்கம் ஜெகன், அந்தணர் ஒன்றியத் தலைவர் முத்து ஜெயந்திநாத குருக்கள், அந்தணர் ஒன்றிய செயலாளர் பிராபாகர குருக்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் அரசியல் கைதிகளின் விடுதலை வேன்டி நடைபெற்ற பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.

IMG_5558 IMG_5561IMG_5556 IMG_5561 IMG_5563 IMG_5565 IMG_5566 IMG_5572 IMG_5582 IMG_5586 IMG_5590