வவுனியாவில் பசுமை இதழ் வெளியீடு!!

715

வவுனியாவில் பசுமை என்ற மகுடம் தாங்கிய சஞ்சிகை தைத்திருநாளாகிய இன்று நண்பகல் 12 மணிக்கு குட்செட் வீதியில் உள்ள கருமாரி அம்மன் ஆலயத்தில் வைபவ ரீதியாக வெளியிட்டு வைக்கப்பட்டது.

வவுனியா பொய்கை பதிப்பகத்தின் வெளியீடாகிய பசுமை இதழ் காலாண்டுக்கு ஒரு தடவை பல்சுவை இதழாக வெளிவரவுள்ளது.

கருமாரி அம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நா.பிரபாகர குருக்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம், சஞ்சிகையின் ஆசிரியர் எழுத்தாளர் மித்யா கானவி, நிர்வாக ஆசிரியர் நா.தயாபரன், ஆகியோர் பசுமை இதழை வைபவரீதியாக வெளியிட்டு வைத்தனர்.

முதற் பிரதியை வவுனியா குருமண்காட்டைச் சேர்ந்த மூத்த விவசாயி எம்.குமாரகுலசிங்கம் பெற்றுக் கொண்டார். வெளியீட்டுரையினை சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் நிகழ்த்தினார்.

IMG_5614 IMG_5620IMG_5634 IMG_5636