உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் J.நந்தகுமார் தலைமையில் இன்று(16.01.2016) காலை 08.30 மணியளவில் உள்ளுர் மொத்த விற்பனை நிலையத்தில் தைப்பொங்கல் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் கா.உதயராசா, நகரசபை செயலாளர் தர்மேந்திரா, உதவி பொலிஸ் அத்தியட்சகர் லொக்கு கெட்டி, போக்குவரத்து தலைமை பொலிஸ் உத்தியோகத்தர், வர்த்தக சங்கத் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் வியாபார நிலைய உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






