கையடக்க தொலைபேசி கட்டணம் குறைவாக செலுத்தும் நாடாக இலங்கை!!

349

mobile-phone-sexting

உலகிலேயே கையடக்கத் தொலைபேசி பாவனைக்கு மாதாந்தம் குறைந்த கட்டணம் செலுத்தும் நாடு இலங்கை என சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகில் வாழும் 10 பேரில் 8 பேர் தொலைபேசி பாவனையாளர்கள் எனவும் தெரியவந்துள்ளது.இலங்கைக்கு அடுத்த படியாக பங்களாதேஷ், ஈரான், பாகிஸ்தான், நேபாளம், இந்தியா, பூட்டான், மொங்கோலியா, எத்தியோப்பியா மற்றும் சூடான் ஆகிய நாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும், கையடக்கத் தொலைபேசி பாவனைக்காக அதிகம் செலவு செய்யும் நாடுகளின் வரிசையில், நெதர்லாந்து, அயர்லாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, இஸ்ரேல், பெல்ஜியம் ஆகிய காணப்பட்டுள்ளன.கையடக்கத் தொலைபேசி பாவனைக்காக ஒரு மாதத்தில் அதிக கட்டணம் செலுத்தும் நாடு எலீஸ் தீவுகள் என அழைக்கப்பட்ட துவாலு தீவாகும். இந்த தீவிலுள்ள ஒருவர் ஒரு மாதத்துக்கு 45.73 டொலர்களை செலவு செய்கின்றார்.