வவுனியாவில் 13 வயதுச் சிறுமி விஷம் அருந்தி தற்கொலை!!

682

Murder

வவுனியாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (17.01.2016) 13 வயதுடைய சிறுமி அலரி விதையினை அரைத்து சிறுமியும் அவரின் அண்ணியும் குடித்து ஆபத்தான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.

அவரின் மூத்த சகோதரரின் மனைவி (அண்ணி ) ஆபத்தான நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இவ்விடம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் 1 குடியிருப்புப் பகுதியில் வசித்துவந்த சுதாகரன் மதுமிதா (13வயது) என்ற சிறுமி ஞாயிற்றுக் கிழமை மதியம் வீட்டில் தாயுடன் ஏற்பட்ட தர்க்கத்தினையடுத்து தனது சகோதரனின் மனைவியுடன் (அண்ணி) தானும் அருகிலிருக்கும் காடு சார்ந்த பிரதேசத்திலிருந்து அலரி விதையினை அரைத்து சிறுமியும் அண்ணியும் அருந்தியுள்ளனர்.

பல மணிநேரத்தின் பின்னர் அயலிலுள்ள ஒருவர் அவர்கள் இருவரும் அப்பிரதேசத்தில் மயக்கமடைந்த நிலையில் இருப்பதாக தெரிவித்ததையடுத்து இருவரையும் சிதம்பரபுரம் மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு தீவிர சிகிச்சையின் பின்னர் பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.

அண்ணி மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

காதல் விவகாரத்தால் ஏற்பட்ட தர்க்கமே விஷம் அருந்துவதற்கு எற்பட்ட காரணம் என்று தெரியவருகிறது. மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.