வவுனியா வர்த்தக சங்கம் இன்று காலை வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திரு எம்.பி.புஸ்பகுமார அவர்களிடம் 150 000 ரூபா பெறுமதியான வசதியற்ற பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் திரு.ரி.கே.இராஜலிங்கம் கலந்து கொண்டு பொருட்களை வழங்கிவைத்தனர்.
உபகரணங்களைப் பெற்றுக்கொண்ட அரச அதிபர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்..
வவுனியா வர்த்தக சங்கத்திடம் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கி வைக்குமாறு எம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு வவுனியா வர்த்தக சங்கம் முன்வந்து உதவி புரிந்துள்ளதாகவும், தொடர்ந்தும் வர்த்தக சங்கத்துடன் இணைந்து பணியாற்ற தாம் தயாராக இருப்பதாகவும்இப் பொருட்கள் மாவட்ட செயலகத்தின் உதவி செயலாளரிடம்; கையளிக்கப்பட்டு அவர்களிடம் இருக்கும் விபரங்களின் அடிப்படையில் பொருட்கள் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.