வவுனியா வன்னி இன் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமான தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் திரு. ஆர். சம்பந்தன் தலைமையில் இடம்பெற்றது.
அதற்கு முன்பதாக தந்தை செல்வாவின் நினைவுச் சிலை இடத்திற்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் அங்கிருந்து சிந்தாமணிப்பிள்ளையார் கோவிலில் பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் மத்திய குழுக் கூட்டம் நடைபெறும் விருந்தினர் விடுதிக்குச் சென்றார்.
இக்கூட்டத்திற்கு மத்திய குழுவில் அங்கம்வகிக்கும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மாலையில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை தெரிவிப்பதாகவும் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.







