வவுனியா கற்பகபுரம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் 2016ம் ஆண்டுக்கான இல்ல மெய்வலுனர் போட்டிகள் அதிபர் திரு.செ.வேதநாதன் தலைமையில் நேற்று (22.01.2016) நடைபெற்றது.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராசா, வலயக் கல்விப் பணிப்பளர் திருமதி.அன்ரன் சோமராஜா ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக பாடசாலையின் முன்னாள் அதிபர் சதாசிவம் அவர்களும் கெளரவ விருந்தினர்களாக உதவிக் கல்விப் பணிப்பளர் (உடற்கல்வி) ஜானாப்.A.M.சுபைர், திரு. கி.யூட்பரதமாறன் (ஆசிரிய ஆலோசகர் உடற்கல்வி), பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி
மற்றும் அயல் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், கோயில் தலைவர், செயலாளர்கள், மாதர் சங்கத் தலைவர், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், பெற்றார்கள், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.






