
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 1999ம் ஆண்டு க.பொ.த (சா/த), 2002ம் ஆண்டு க.பொ.த (உ/த) கல்வி பயின்ற பாடசாலை பழைய மாணவர்களினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நுழைவாயில் நாளை புதன்கிழமை (27.01.2016) பிரமாண்ட திறப்பு விழா நிகழ்வுடன் பாடசாலை பாவணைக்கு கையளிக்கப்படவுள்ளது.
இந்நுழைவாயில் வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதி .இளஞ்செழியன் அவர்களினால் திறந்து வைக்கப்படவுள்ளது. மேலும் பிரபாகரன் (நீதிபதி, கிளிநொச்சி), அலெக்ஸ் ராஜா (நீதிபதி, மன்னார்), திருமதி. அன்ரன் சோமராஜா (வலயக் கல்விப் பணிப்பாளர், வவுனியா), புஸ்பகுமார (அரச அதிபர், வவுனியா), கல்லூரி அதிபர் மரியநாயகம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழு சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்.
Batch of 2002 (வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்)





