பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைத்தலைவர்களாக இருக்க முடியாது!சி.வி. விக்கினேஸ்வரன்!

321

Wigneswaran-4

முல்­லைத்­தீவு மாவட்டம் கரை­து­றைப்­பற்று பிர­தேச செய­லக கருத்­த­ரங்கு மண்­ட­பத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் ஆற்றிய உரை……..

எமது நிலங்கள் பறி­போ­வ­தற்கும் எமது வனங்­களும் ஜந்­துக்­களும் பாதிப்­ப­டை­வ­தற்கும் எமது வளங்கள் சூறை­யா­டப்­ப­டு­வ­தற்கும் நாங்கள் ஒத்­தி­சை­வா­ளர்­க­ளாக இருந்து நடக்க முடி­யாது என்ற கார­ணத்­தி­னால்தான் நாங்கள் சுய­நிர்­ணய உரிமை வேண்டி பற்­று­று­தி­யுடன் செயல்­ப­டு­கின்றோம். சுய­நிர்­ணய உரி­மையை அர­சாங்கம் ஏற்றுக் கொண்டால் மத்தி தனக்­கென ஏற்றுக் கொண்ட பல விட­யங்­க­ளையும் மாகா­ணத்­திற்குக் கைய­ளிக்க வேண்­டி­யி­ருக்கும். இத­னால்தான் ஐக்­கிய நாடு­களில் இருந்து வரும் உயர் அதி­கா­ரி­க­ளுக்கு இது பற்றி விளக்கி வரு­கின்றேன். எமக்­கு­ரிய மாகாண உரித்­துக்­களை மத்தி எடுத்துப் பிர­யோ­கிப்­பது என்­பது அன்­னியர் ஒருவர் எமது சயன அறையில் வந்­தி­ருந்து அங்கு உறைந்­தி­ருக்க உரிமை கொண்­டா­டு­வ­தற்கு ஒப்­பா­ன­தாகும்.

பல இழு­ப­றி­களின் பின்னர் இந்த மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்­டத்தைக் கூட்­டி­யி­ருப்­ப­தற்­காக எங்கள் அர­சாங்க அதி­பரைப் பாராட்­டு­கின்றேன்.

மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்­டங்­களின் பொது­வான தாற்­ப­ரி­யத்தை நாங்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். 1987ஆம் ஆண்டின் இந்­திய – – இலங்கை ஒப்­பந்­தத்தின் பின்னர் பதின்­மூன்­றா­வது திருத்தச் சட்டம் அமு­லுக்கு வந்த போது இப்­பேர்ப்­பட்ட மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்­டத்­திற்­கான தேவை இருக்­க­வில்லை. ஏனெனில் மாவட்டச் செய­லா­ளர்கள் என்று அழைக்­கப்­பட்­ட­வர்கள் மாகா­ண­ச­பையின் கண்­காணிப்பின் கீழேயே அப்­போது கட­மை­யாற்­றி­னார்கள்.

அதன் பின்னர் முன்னாள் ஜனா­தி­பதி பிரே­ம­தாச காலத்தில் இரட்டை நிர்­வாகச் செயற்­பாட்டை உரு­வாக்கும் வண்ணம் மாவட்டச் செய­லா­ளர்கள் மத்­திக்குக் கீழ் கொண்டு வரப்­பட்­டனர். இதனால் மாகா­ண­ச­பை­க­ளுக்கு இலங்கை – – இந்­திய உடன்­படிக்கையின் கீழ் ஒற்­றை­யாட்­சியில் வழங்­கப்­பட்ட அதி­கா­ரப்­ப­கிர்வு பாதிக்­கப்­பட்­டது. முக்­கி­ய­மாக வட கிழக்கு மாகா­ணங்­க­ளுக்­கென்றே இனப்­பி­ரச்­சி­னையைத் தீர்க்க அதி­கா­ரப்­ப­கிர்­வா­னது 13ஆவது திருத்தச் சட்­டத்­தினால் கொண்­டு­வ­ரப்­பட்­டது. ஆனால் ஒற்­றை­யாட்சி என்­றதால் ஜனா­தி­ப­தி­யினால் உடன்­பாட்­டினால் வழங்­கப்­பட்ட உரித்தை மீளப்­பெறக் கூடி­ய­தா­க­வி­ருந்­தது. மாவட்ட செய­லா­ளர்­களைத் திரும்­பவும் மத்­திய அர­சாங்கக் கட்­டுப்­பாட்டின் கீழ் வைத்­ததால் நிர்­வா­கத்தில் சிக்­கல்கள் ஏற்­படத் தொடங்­கின.

அதை நிவர்த்தி செய்­வ­தற்­காக ஜனா­தி­பதி சந்­தி­ரிகா அம்­மை­யாரின் காலத்தில் HA/DG/D/DP என்ற 1996ஆம் ஆண்டின் ஒக்­டோபர் மாதம் 24ஆம் திக­திய சுற்­ற­றிக்கை வெளியி­டப்­பட்­டது. அதில் மத்­தி­யையும் மாகா­ணத்­தையும் ஒருங்­கி­ணைத்து நிர்­வா­கத்தை முன் நடத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. உண்­மையில் திரும்­பப்­பெற்ற உரித்தை மாகா­ணங்­க­ளுக்கே திருப்பி அளித்­தி­ருக்க வேண்டும். அவ்­வாறு செய்­யப்­ப­ட­வில்லை. ஒருங்­கி­ணைப்புக் குழுக்கூட்­டத்­திற்கு மாகாணம் சார்பில் முத­ல­மைச்­சரும் மத்தி சார்பில் அமைச்சர் அல்­லது சிரேஷ்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வரே இணைத்­த­லை­வ­ராக நிய­மிக்­கப்­பட வேண்டும் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. உண்­மையில் அமைச்­ச­ருக்குப் பதி­லாக சிரேஷ்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என்று அதில் குறிப்­பிடும் போது அது ஒரு குறை­பா­டா­கவே சட்­டப்­படி தெரிந்­தது. மாகாண முத­ல­மைச்சர் ஒருவர் அமைச்சர் என்ற ரீதியில் சட்ட ஏற்­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்தும் ஒரு­வ­ராவார். மத்­திய அமைச்சர் என்­ப­வரும் அவ்­வாறே. அவர்­க­ளுக்கு நடை­மு­றைப்­ப­டுத்தும் அதி­காரம் உண்டு. (They have executive powers). ஆனால் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சட்­ட­வாக்கத் தகை­மை­யையே கொண்­ட­வர்கள். (They are legislators) அவர்கள் ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்­டங்­களில் பங்கு பற்றி மக்கள் குறை­களைத் தெரி­யப்­ப­டுத்த வேண்­டுமேயொழிய நடை­மு­றைப்­ப­டுத்தும் பணி­யினை ஏற்­றி­ருக்கும் முத­ல­மைச்சர், அமைச்சர் என்­ப­வர்­க­ளுடன் இணைத்­த­லை­வர்­க­ளாக இருக்க முடி­யாது. வைத்­திய கலா­நிதி சிவ­மோகனும் காதர் மஸ்தானும் என்­னு­டைய நண்­பர்கள். அவர்­களை நான் குறை­கூ­ற­வில்லை. அவர்கள் மட்­டு­மல்ல. இங்­கி­ருக்கும் அனைத்துப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இணைத்­த­லை­வர்­க­ளாகப் பங்­கு­பற்­றி­னாலும் எனக்கு ஆட்­சே­பம் இல்லை. ஆனால், சட்­டத்­திற்கு ஆட்­சே­பம் உண்டு. இப்­பேர்ப்­பட்ட விட­யங்­களை உச்ச நீதி­மன்­றத்­துக்கா எடுத்துச் செல்­வார்கள்? ஆகவே இவை பற்றிப் பேசாது விடு­தலே உசிதம். அப்­ப­டி­யாயின் இணைத்­த­லை­வர்கள் பற்றிக் குறிப்­பி­டு­வது ஏனென்று நீங்கள் வின­வலாம். அதற்குக் காரணம் உண்டு.

இன்­றைய கால­கட்­டத்தில் ஜனா­தி­ப­தி மற்றும் அமைச்­சர்­கள் ஆகியோரின் கோரிக்­கைக்கு அமைய மாகா­ண­ச­பை­களைக் கிள்­ளுக்­கீ­ரை­க­ளாக உப­யோ­கிக்க எத்­த­னிக்­கப்­ப­டு­கின்­றது. ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் வரு­கின்றார் மற்றும் சர்­வ­தேச கவ­னிப்பு எம்பால் ஈர்க்­கப்­பட்­டுள்­ளது என்­ப­தற்­காக அர­சாங்கம் இது­காலும் வாளா­தி­ருந்­து­விட்டு அர­சியல் ரீதி­யாக அவ­சர அவ­ச­ர­மாக இக்­கூட்­டங்­களை நேரக்­கட்­டுப்­பா­டு­க­ளுடன் நடத்த முன்­வந்­தி­ருப்­பது புரி­கின்­றது. ஆனால் ஒருங்­கி­ணைப்புக் குழுக்கூட்டம் ஒன்றை வெறு­மனே மத்­திய அமைச்­சர்­க­ளையும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் வைத்துக் கொண்டு நடத்­தலாம் என்று நினைப்­பது தவ­றா­னது. ஒருங்­கி­ணைப்பு என்றால் இரு­சா­ரா­ரையும் சேர்த்து வைப்­பது. யாரையும் யாரையும் நாங்கள் ஒருங்­கி­ணைக்­கின்றோம் என்­பதைப் பார்க்க வேண்டும்.

இது மற்­றைய மாகா­ணங்­களில் அத்­தனை பெரி­தாகப் பார்க்­கப்­பட மாட்­டாது என்­பது எனக்குத் தெரியும். ஆனால் மத்­தியில் இருக்கும் அர­சாங்­கமும் மாகா­ணத்தில் இருக்கும் அர­சாங்­கமும் வேறு வேறு கட்­சி­களைச் சேர்ந்­தி­ருப்­பதால் மத்­தியும் மாகா­ணமும் ஒருங்­கி­ணைந்து நட­வ­டிக்­கை­களைக் கொண்டு செல்­வது வட­மா­கா­ணத்தில் மிகவும் முக்­கி­ய­மாக இருக்­கின்­றது. ஆகவே மத்தியையும் மாகா­ணத்­தையும் பிரதி­நிதித்­துவப் படுத்தும் நபர்கள் இணைத்­த­லை­வர்­க­ளாக இருந்து நடத்­தி­னால்தான் ஒருங்­கி­ணைப்புக் கூட்­டங்கள் சட்­ட­வ­லுப்­பெற்­றி­ருக்கும்.

தனியாக அர­சாங்க அமைச்­சர்­க­ளையோ சட்­ட­வாக்கப் பொறுப்பில் இருக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையோ மட்டும் இணைத்­த­லை­வர்­க­ளாகக் கொண்டு ஒரு ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்­டத்தை நடத்த முடி­யாது. நடத்­தினால் அது ஒருங்­கி­ணைப்புக் குழு கூட்­ட­மா­காது. நடை­மு­றைப்­ப­டுத்தும் அதி­காரம் கொண்ட மத்­தியின் அமைச்­சரும் சட்­ட­வாக்கப் பணி­களில் ஈடு­பட்­டுள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் நடத்தும் ஒரு கூட்டம் ஒருங்­கி­ணைப்புக் குழுக்கூட்­ட­மா­கவே கரு­தப்­ப­ட­மாட்­டாது. அங்கு ஒருங்­கி­ணைப்பு நடை­பெற வேண்­டு­மானால் மாகாணம் சார்­பாக நடை­மு­றைப்­ப­டுத்தும் அதி­காரம் கொண்ட ஒருவர் அமர்ந்தே தீர வேண்டும். இப்­பொ­ழுது எல்­லோரும் இதை உணர்ந்து கொண்­டுள்­ளார்கள் என்று நம்­பு­கின்றேன்.

இத­னால்தான் ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்­டங்­களில் நான் தொடக்­கத்தில் இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் ஈடு­பட்ட போதே அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் முன்­னி­லையில் ஒரு கருத்தை வெளியிட்­டி­ருந்தேன். ஜனா­தி­பதி மஹிந்த ரா­ஜ­பக் ஷ ஒருங்­கி­ணைப்புக் குழு­வா­னது மஹிந்த சிந்­த­னை­களை நடை­மு­றைப்­ப­டுத்­தவே நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது என்று கூறி அதனை நடை­மு­றைப்­ப­டுத்­தவே என்னை நிய­மித்­துள்­ள­தாகக் குறிப்­பிட்­டதைக் கண்­டித்து வட­மா­காணம் மஹிந்த சிந்­த­னையை ஏற்­க­வில்லை என்றும் 38 பேரில் 30 பேர் அச்­சிந்­த­னையை ஏற்­கா­த­வர்கள் தான் மக்­களால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார்கள் என்ற கருத்­தையும் வெ ளியிட்டு நடை­பெறும் செயற்­திட்­டங்கள் பாதிக்­கப்­படக்கூடாது என்ற கார­ணத்தால் நாங்கள் பங்குபற்­று­கின்றோம் என்­பதைக் குறிப்­பிட்­டி­ருந்தேன்.

அண்­மையில் தற்­போ­தைய ஜனா­தி­பதிக்கும் இது சம்­பந்­த­மான விட­யங்­களை 13.01.2016 அன்று விளக்கிக் கடிதம் எழு­தி­யி­ருந்தேன். இன்­னமும் அவரின் பதில் கிடைக்­க­வில்லை. ஒரு­வேளை சட்­டத்­திற்குப் புறம்­பான விதத்தில் அர­சியல் கார­ணங்­க­ளுக்­காக நிய­ம­னங்கள் நடை­பெற்­றி­ருக்­கின்­றன என்­பதை ஜனா­தி­பதி உணர்ந்து கொண்­டுள்­ளாரோ தெரி­ய­வில்லை. நாம் புறக்­க­ணிக்­கப்­பட்டு மத்­தியால் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் இந்தக் கால கட்­டத்தில் இதனை ஆவ­ணப்­ப­டுத்த வேண்டும் என்ற கார­ணத்­தி­லேயே இதனை இப்­பொ­ழுது குறிப்­பிட்டேன்.

அடுத்து முல்­லைத்­தீவு மாவட்­டத்­திற்கு வருவோம். ஜனா­தி­பதிக்கு காடு­களின் மத்­தியில் கன­மான காட­ழிப்பு நடந்து கர­வாகக் காட்டு நிலங்கள் பறி­போ­கின்­றன என்­பதை அவ­ருக்குத் தெரி­யப்­ப­டுத்­தி­யதன் பய­னாக அவரால் ஒரு ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அதில் பின்­வ­ரு­மாறு கூறப்­பட்­டுள்­ளது.

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் காடு­களை வெட்டித் துப்­பு­ரவு செய்தல்

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் மீள்­குடி­யேற்றம் செய்தல் மற்றும் ஏனைய அபி­விருத்தி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக காடுகள் துப்­புரவு செய்­யப்­ப­டு­வ­தனால் சுற்­றா­ட­லுக்கு பாரிய அழிவு ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக முறைப்­பா­டுகள் கிடைத்து வரு­கின்­றன.

இந்த நிலை­மையின் பேரில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் மீள்­கு­டி­யேற்றம் மற்றும் ஏனைய அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக தொடர்­பு­டைய அதி­கா­ரி­களின் அனு­ம­தி­யு­டனோ, இல்­லா­மலோ தற்­போது செய்­யப்­படும் அனைத்து காடு­வெட்­டு­தல்கள் /துப்­ப­ுர­வாக்­கு­தல்­களை உட­ன­டி­யாகச் செயற்­ப­டும்­வண்ணம் நிறுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும்.

அனைத்து தரப்­பி­ன­ரு­டனும் கலந்­து­ரை­யா­டிய பின்னர் இவ்­வா­றான அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கைகள் / மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்­கை­க­ளுக்­காக ஏற்­க­னவே வழங்­கப்­பட்­டுள்ள உரி­மங்கள் / அனு­ம­திப்­பத்­தி­ரங்­களை மீள செல்­லு­ப­டி­யாக்­குதல் மற்றும் புதி­தாக உரி­மங்கள்/அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் வழங்­கு­வ­தற்கு எதிர்­கா­லத்தில் அலு­வ­லர்­களின் குழு­வொன்று நிய­மிக்­கப்­ப­டு­வ­துடன், அந்த புத்­தி­ஜீ­விகள் குழுவின் விதந்­து­ரை­க­ளுக்­க­மைய மேற்­கு­றித்த விட­யங்கள் தொடர்பில், தொடர் நட­வ­டிக்­கை­யெ­டுப்­ப­தற்குத் தேவை­யான ஆலோ­ச­னைகள் வழங்­கப்­படும்.

எமது மாகா­ண­சபை உறுப்­பினர் இர­வி­கரனே இவை­ பற்­றிய விப­ரங்­களை முதன் முதலில் எனக்­க­ளித்தார். மாகாணக் காணிகள் பறி­போ­காது, விலை போகாது இருக்க யாவரும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும். இர­வி­கரன் இது சம்­பந்­த­மாக எடுத்த சகல நட­வ­டிக்­கை­க­ளுக்கும் என் பாராட்­டுக்கள் உரித்­தா­குக.

எமது சில அலு­வ­லர்கள் மத்­திய அர­சாங்­கத்­துடன் இணைந்து எமது மாகா­ண ச­பை­யின் உரித்­துக்­களைப் பறித்­தெ­டுத்துக் கொடுக்க விழை­வதை நாம் ஒரு­போதும் ஏற்றுக் கொள்ள முடி­யாது.

இத­னால்தான் இலங்கை -– இந்­திய ஒப்­பந்­தத்­திற்குப் பங்கம் ஏற்­ப­டுத்தும் விதத்தில் ஜனா­தி­பதி பிரே­ம­தாச நடந்து கொண்­டமை கண்­ட­னத்­திற்கு உரி­ய­தாகக் காணப்­ப­டு­கின்­றது. அவரின் அன்­றைய செயல் வடக்­கிற்கும் கிழக்­கிற்­குமே பாரிய பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யது. இதனால்தான் மாகாண வனவளத்­தி­ணைக்­களம், வன­ஜீவராசிகள் திணைக்­களம் ஆகி­யன வேறு சில திணைக்­க­ளங்­க­ளுடன் சேர்த்து மாகா­ணத்தின் மேற்­பார்­வையின் கீழ் கொண்டு வர­வேண்டும் என்று கோரி­வ­ரு­கின்றோம். சுய­நிர்­ணய உரிமை என்­றெல்லாம் கூறி­வரும் நாங்கள் இதனைக் கவ­னத்­திற்கு எடுக்க வேண்டும். எமது நிலங்கள் பறி­போ­வ­தற்கும் எமது வனங்­களும் ஜீவராசி­களும் பாதிப்­ப­டை­வ­தற்கும் எமது வளங்கள் சூறை­யா­டப்­ப­டு­வ­தற்கும் நாங்கள் ஒத்­தி­சை­வா­ளர்­க­ளாக இருந்து நடக்க முடி­யாது என்ற கார­ணத்­தி­னால்தான் நாங்கள் சுய­நிர்­ணய உரிமை வேண்டி பற்­று­று­தி­யுடன் செயல்­ப­டு­கின்றோம். சுய­நிர்­ணய உரி­மையை அர­சாங்கம் ஏற்றுக் கொண்டால் மத்தி தனக்­கென ஏற்றுக் கொண்ட பல விட­யங்­க­ளையும் மாகா­ணத்­திற்குக் கைய­ளிக்க வேண்­டி­யி­ருக்கும். இத­னால்தான் ஐக்­கிய நாடு­களில் இருந்து வரும் உயர் அதி­கா­ரி­க­ளுக்கு இது பற்றி விளக்கி வரு­கின்றேன். எமக்­கு­ரிய மாகாண உரித்­துக்­களை மத்தி எடுத்துப் பிர­யோ­கிப்­பது என்­பது அன்­னியர் ஒருவர் எமது சயன அறையில் வந்­தி­ருந்து அங்கு உறைந்­தி­ருக்க உரிமை கொண்­டா­டு­வ­தற்கு ஒப்­பா­ன­தாகும்.

இன்று திவி­நெ­கும பற்­றியும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. திவி­நெ­கும என்­பதும் மாகாண அதி­கா­ரங்­களை மத்­திக்கு எடுத்த ஒரு செயல்­பாடே. மத்­தியின் உள்­ளீ­டல்­கள்­ முற்­றிலும் நிறுத்­தப்­பட்ட மாகாணத் தன்­னாட்­சியைத் தானே கொண்டு நடத்த வேண்டும் என்­பதே எமது மக்­களின் எதிர்­பார்ப்பு. முக்­கி­ய­மான சில விட­யங்கள் மட்டும் மத்­தி­யிடம் இருக்­கலாம். விரைவில் இது சம்­பந்­த­மான ஒரு தீர்­மானம் அர­சியல் ரீதி­யாக எடுக்­கப்­படும். அதற்­கி­டையில் இந்த ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்டம் நடை­பெ­று­கின்­றது.

கூடு­மான வரையில் அலு­வ­லர்கள் தங்கள் அமைச்­சுக்கள், திணைக்களங்கள் பற்றிய மிகச் சுருக்கமான அறிக்கைகளைத் தந்து ஒருங்கிணைப்புக் குழுவிடம் அனுமதி கோரும் விடயங்கனை முன்னிறுத்தி அவற்றிற்கான அனுமதி பெறுவதே சாலச் சிறந்தது. முன்னைய கூட்டங்கள் போல் காலத்தை விரயமாக்கும் விதத்தில் ஒவ்வொரு அலுவலரும் தமது திணைக்களங்கள் பற்றி விலாவாரியாக விளக்கம் அளிப்பது தேவையற்றதாகவே எனக்குப் படுகின்றது. மற்றைய இணைத்தலைவர்கள் இது பற்றி உங்கள் கருத்தையும் தெரியப்படுத்துங்கள். உறுப்பினர்களின் உரித்தில் நாங்கள் கை வைப்பதாக இதை எடுக்கக் கூடாது. காரணம் அலுவலர்கள் விலாவாரியாக விளக்கம் அளிப்பதில்தான் எமது உறுப்பினர்களின் கேள்விகள், கவனங்கள் எழுவன என்று கூற முடியாது. அந்தந்தத் தலையங்கம் வெளிப்படுத்தப்படும் போது அது சம்பந்த

மான ஏதோ ஒரு விடயம் பற்றி உறுப்பினர்கள் கேள்விகள் கேட்பதை நாங்கள் ஒருவரும் கட்டுப்படுத்த மாட்டோம். அலுவலர்களின் விளக்கங்கள் தமது ஆவணங்களின் அடிப் படையில் ஏற்கனவே எம்முன் இருப்பதால் ஆவணங்கள் தரப்பட்ட பின்னர் தேவையான விபரங்களை எமக்குத் தந்துத வினால் நன்மை

பயக்கும். நேரக்கட்டுப் பாட்டையும் நாங்கள்

கடைப்பிடிக்கலாம் என்று கருதுகின்றேன். இணைத்தலைவர்கள் நாங்கள் மூவர் இந்தக் கூட்டம் முடிந்ததும் வவுனியா செல்ல வேண்டியிருப்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்து எனது இணைத் தலைவர் பேச்சை இத்துடன் முடித்துக் கொள்கின்றேன்.