
பேராதனைப் பல்கலைக் கழக மாணவன் வவுனியா சேமமடு சிவகேசவனின் ‘ஈழக் கவிஞனின் சங்கற்பம்’ எனும் நூல் வரும் 31.01.2016 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் வவுனியா நகரசபை பழைய மண்டபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழருவி சிவகுமாரன் தலைமையில் இடம்பெறவுள்ள இவ் வெளியிட்டு விழாவிற்கு பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மற்றும் சிறப்பு விருந்தினராக கா.உதயராசா(பிரதேச செயலாளர்-வவுனியா), இ.நித்தியானந்தன் (கலாசார உத்தியோகத்தர் -வவுனியா), ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இன் நிகழ்வில் கலை ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.







