வவுனியா வடக்கு ஒலுமடு அ.த.க.பாடசாலையின் வருடாந்த இல்ல திறனாய்வுப் போட்டி பாடசாலையின் அதிபர் திரு.விமலேந்திரன் தலைமையில் நேற்று (28.01.2016) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் லிங்கநாதன், தியாகராசா, இந்திரராசா, நெடுங்கேணி பிரதேச செயலாளர் திரு.சத்தியசீலன், நெடுங்கேணி பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர்கள் பூபாலசிங்கம், செந்தூரன், வவுனியா வடக்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் முன்னாள் தலைவரும், மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவருமான தேவராசா, கோட்டக்கல்வி அதிகாரி, அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலையின் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த பாடசாலையில் நிலவிவரும் ஆசிரியர்கள் பற்றாக்குறை, குடிநீர் பிரச்சினை ஆகியவற்றை நிவர்த்தி செய்து தரும்படி மக்கள் பிரதிநிதிகளிடம் பாடசாலை கல்விச்சமுகத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர். பன்முகப்படுத்தப்பட்ட தமக்குரிய நிதிகளுடாக அவற்றை நிவர்த்தி செய்து தருவதாக பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் தமது உரைகளில் தெரிவித்தனர்.
கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் கலந்துகொண்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன.






