வவுனியா மாவட்ட சிவில் பாதுகாப்புக்குழுக் கூட்டம்!!(படங்கள்)

564

 
வவுனியா மாவட்டத்திற்கான சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நேற்று (30.01.2016) காலை 10 மணிக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் திரு. கா. உதயராசா தலைமையில் நடைபெற்றது.

வவுனியவில் சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் பிரதேச கிராமசேவையாளர்கள் தமது பிரதேசத்தில் இடம்பெறும் நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன், பொது மக்கள் தொடர்பான பாதுகாப்பு, போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் போன்றவற்றை ஆராய்ந்து அதில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் பொலிசாரின் உதவி பொது மக்களுக்கான சேவை தொடர்பாகவும் பொலிசார் விளக்கமளித்தனர்.

வவுனியா மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி சன்ன அபேரத்தின, மக்கள் தொடர்பாடல் பொறுப்பதிகாரி, பொது சுகாதார பரிசோதகர் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை செயலாளர் திருமதி சுகந்தி கிஷோர், சிவில் பாதுகாப்புக் குழுக்களின் உறுப்பினர்கள், கிராமசேவையாளர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

20160129_101940 20160129_101948 20160129_101953 20160129_101957 20160129_102008 20160129_102012 20160129_102017 20160129_102023