வவுனியா நகரசபை வீதியில் முச்சக்கர வண்டி மோட்டார் சைக்கிள் விபத்து இன்று மாலை 05.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா நீதிமன்ற வீதியின் ஊடாக வந்த முச்சக்கர வண்டி வவுனியா நகரசபை வீதியினூடாக செல்வதற்காக திரும்பிய பொழுது பின் பக்கமாக வந்த மோட்டார் சைக்கிள் முன்னோக்கி செல்ல முற்பட்ட வேளையிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.






