பேராதனைப் பல்கலைக் கழக மாணவன் வவுனியா சேமமடு சிவகேசவனின் ‘ஈழக் கவிஞனின் சங்கற்பம்’ எனும் நூல் நேற்று (31.01.2016) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் வவுனியா நகரசபை பழைய மண்டபத்தில் வெளியிடப்பட்டது.
தமிழருவி சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற இவ் வெளியிட்டு விழாவில் வடமாகாண சபை உறுப்பினர் G.T.லிங்கநாதன். கா.உதயராசா(பிரதேச செயலாளர்-வவுனியா), இ.நித்தியானந்தன் (கலாசார உத்தியோகத்தர் -வவுனியா), வவுனியா நகரசபையின் முன்னாள் உபபிதா திரு.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.






