வவுனியா ஓமந்தை மகிழங்குளம், றம்பைக்குளம், புதியவேலர் சின்னக்குளம் பகுதிகளில் வசிக்கும் முன்னாள் போராளிகள், மாவீர்களின் 30 பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள்முன்னாள் போராளி மதன் தமிழ் விருட்சத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக சாந்தநாயகி நற்பணி மன்றத்தால் மகிழங்குளம் பொது நோக்கு மண்டபத்தில் வைத்து நேற்று முன்தினம் (31.01.2016) வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மகிழங்குளம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கோபாலகிருஸ்ணன், முன்னாள் போராளி மதன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ), செயலாளர் மாணிக்கம் ஜெகன், மாதர்சங்க உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.






