
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் முக்கியஸ்தர் கோ.ராஜ்குமார் அவர்களின் தந்தையார் கந்தசாமி கோபாலகிருஸ்ணன் அவர்கள் நேற்று (01.02.2016) இறைபதம் அடைந்துள்ளார்.
இயந்திர கதியாகி விட்ட உலகில் இனத்தின் விடுதலை பற்றி சிந்திக்கவும் மகனாரை உவந்தளித்த மாதந்தைக்கு’, வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினரும், கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் (FSHKFDR) வடக்கு கிழக்கு மாகாண சங்கங்களும், தமிழ் தேசியக்கூட்டமைப்பினரும் தமது இதய அஞ்சலிகளை செலுத்துகின்றனர்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரதும் கைகளை இறுகப்பற்றி தாளாத சோகத்தில் இரண்டறக்கலந்துகொள்வதோடு, அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் அநுதாபங்களையும் கூறி அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றோம்.
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு






