வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி படுகாயம்!!

567

 
இன்று(03.02.2016) காலை கந்தசாமிகோவில் வீதியில், இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்துக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி, சூசைப்பிள்ளையார்குள வீதியில் வேகமாக வந்த முல்லைத்தீவு பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

இவ் விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் காயமடைந்தார். குறித்த முச்சக்கரவண்டி சாரதி இதேபோல மணிக்கூட்டுச் சந்தியிலும் ஒரு விபத்தில் முன்னர் சிக்கியதாகவும் அப்பொழுதும் பிள்ளைகள் அருந்தப்பு தப்பியதாகவும் காயமடைந்த பிள்ளையின் தந்தை தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெறும் விபத்துக்களைக் குறைப்பதற்கு வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை சற்று மெதுவாகவும் அவதானமாகவும் செலுத்தவேண்டும் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

1 2