வவுனியா விபுலானந்தா கல்லூரியில் கலைப்பிரிவில் உயர்தரம் கற்க்கும் மாணவி ச.வளர்மதிக்கு அவரது வறுமை நிலைகாரணமாக துவிசக்கரவண்டி வாங்க முடியாமல் கூமாங்குளத்தில் இருந்து பாடசாலைக்கு சுமார் 5 கிலோ மீட்டர் நடந்து வந்து மிக சிரமத்துடன் கற்பதாகவும், தனியார் வகுப்புகளுக்கு செல்ல முடியாது சிரமபடுவதாகவும் பாடசாலை ஆசிரியை திருமதி வசந்தி ஸ்ரீநிவாசன் அவர்கள் சமூக சேவை திணைக்களத்துக்கு ஊடாக தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்) அவர்களிடம் தெரியபடுத்தி அவருக்கு ஒரு துவிசக்கர வண்டி வழங்கும் படி கேட்டிருந்தார் .
அதன் நிமித்தம் கனடாவில் இருந்து இயங்கும் ராம் சிவா அவர்களின் ராம் பவுண்டேசன் மூலம் அந்த மாணவிக்கு நேற்று (02.02.2016) பாடசாலை காலை பிரார்த்தனையின் பின்னர் துவிசக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டது .
விபுலானந்தா கல்லூரி அதிபர் திருமதி மஞ்சுளா அருள்தேவநேசன், ஆசிரியை திருமதி வசந்தி ஸ்ரீநிவாசன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன், பாடசாலை ஆசிரியர்கள், கலைப் பிரிவு மாணவர்கள் ஆகியோர் இந்த துவிசக்கர வண்டி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.






