இன்று(04.02.2016) வியாழக்கிழமை இலங்கையின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அஸ்திரம் மக்கள் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் கூமாங்குளம் கிராம சேவகர் திரு.தவராஜா அவர்களின் தலைமையில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றது.
இதன்போது தேசியக்கொடி ஏற்றி தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நல்லாட்சி தொடர்பான கலந்துரையாடலும் சிரமதானமும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சமுர்த்தி உத்தியோகத்தர், அஸ்திரம் மக்கள் நற்பணி மன்றத்தின் தலைவர் சுதர்சன், அஸ்திரம் மக்கள் நற்பணி மன்றத்தின் பொதுச்செயலாளர் ந.கிருஸ்ணமூர்த்தி, தேசிய அமைப்பாளர் நா.ஸ்ரீதரன், அஸ்திரம் இளைஞர் கழக தலைவர் கோ.ரகுவரன், கூமாங்குளம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் திரு.புஸ்பராஜா, செயலாளர் மா.சுரேந்திரன், ஜய பூமி அமைப்பின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.






