வவுனியா நகரசபைக்கு முன்பாக உள்ள பொங்குதமிழ் தூபிக்கு முன்பாக காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் இன்று (04.02.2016) ஈடுபட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் வவுனியா பிரஜைகள் குழுவின் ஒத்துழைப்படன் இடம்பெற்ற இவ் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் வாயை கறுப்பத்துணியால் கட்டியவாறு கறுப்பு நிறக்கொடிகளையும் பதாதைகளையும் ஏந்தியவாறு குடும்ப சகிதமாக உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர்.
காலை 10 மணிக்கு ஆரம்பமான இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் சுதந்திரமில்லாத இனத்தின் பிரதிநிதி சுதந்திரதின நிகழ்வில் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் படத்தை தாங்கிய பதாதையையும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும், நாங்கள் எங்கள் சொந்த ஊருக்கு போக வழிவிடு, படித்தவனை நம்பினோம் படுகுழியில் தள்ளுகின்றான், தமிழ் இனத்தை, இராணுவமே எமது காணிகளை விட்டு வெளியேறு என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.






