வவுனியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் நிகழ்வு!!

547

 
புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று(05.02.2016) இடம்பெற்றது.

புதிய அரசாங்கம் தற்போது புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் ஒன்றினை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பில் மக்கள் கருத்துக்களை அறியும் வகையில் ஓரு நிபுணர் குழு நியமிக்கப்பட்டு மாவட்ட மட்டத்தில் கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு கட்டமாக வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அக் குழுவைச் சேர்ந்த சீ.இளங்கோவன், எஸ்.தவராசா, எஸ்.விஜசங்கர், ஜே.குரிஸ், என்.செல்வகுமாரன், நதீஸ்கர் ஆகியோர் வருகை தந்து மக்கள் கருத்துக்களை பெற்றனர்.

இதேவேளை, மக்கள் கருத்தறியும் நிகழ்வு நாளை சனிக்கிழமையும் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

20160205_092516 20160205_092531 20160205_092538 20160205_092607 20160205_092612 20160205_092746 20160205_092753 20160205_093634 20160205_093808 20160205_093812 20160205_093831