வவுனியா பூவரசங்குளம் பொலிஸாரினால் 300,000 பெறுமதியான மரக்குற்றிகள் பறிமுதல்!!

642

 
வவுனியா பூவரசங்குளம் பொலிஸாரினால் சாளம்பைக்குளம் பகுதியில் வைத்து 300,000 இலட்சம் பெறுமதியான முதுரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது குறித்து பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில்..

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலை அடுத்து சாளம்பைக்குளம் பகுதியில் டிப்பர் வாகனத்தில் 10 அடி நீளமான 21 முதுரை மரகுற்றிகள் ஏற்றப்பட்டு மணல் , சிறு கற்களால் மூடப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டது. அத்துடன் மரக்குற்றிகள் மற்றும் டிப்பர் வாகனம் எம்மால் கைப்பற்றப்பட்டதுடன் வாகன சாரதியினையும் கைது செய்து தடுத்து வைத்துள்ளோம்.

மேற்படி சம்பவமானது சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி லசந்த விக்ரமசிங்க அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய பூவரசங்குளம் பொலிஸ் நிலை பொறுப்பதிகாரி R.P.R.R.ராஜகுரு தலைமையில் P.S.3681 பிரேமதிலக்க, P.C. 81176 சரிக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

IMG_6346 IMG_6347 IMG_6353 IMG_6360 IMG_6362  IMG_6359IMG_6367