அர்ஜென்டினாவில் ரயிலை செலுத்தும் போது தூங்கி வழிந்த, மொபைல் போனில் பேசிய டிரைவர்கள்!!

295

rail

அர்ஜென்டினாவைச் சேர்ந்த ரயில் டிரைவர்கள் பணி நேரத்தில் தூங்குவது, மொபைல் போனில் பேசுவது, புத்தகம் வாசிப்பது ஆகியவற்றை செய்தது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

கடந்த வாரம் ஸ்பெயினில் ரயில் விபத்து ஏற்பட்டு 79 பேர் பலியாகினர். அந்த ரயிலின் டிரைவர் வண்டியை ஓட்டிக் கொண்டே செல்போனில் பேசியபோது விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அர்ஜென்டினாவில் ரயில் டிரைவர்கள் வண்டியை ஓட்டும்போது என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் பியூனஸ் ஏர்ஸில் உள்ள ரயில் நிலையத்தில் ஒரு பயணிகள் ரயில் மற்றொன்றின் மீது மோதியதில் 3 பேர் பலியாகினர். இதையடுத்து டிரைவர்களின் அறையில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது. அந்த கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன.

காரணம் ரயில் ஓடும் போது டிரைவர்கள் ஹாயாக மொபைல் போனில் பேசியது, புத்தகம் வாசித்தது, தூங்கியது ஆகியவை பதிவாகியுள்ளன. ரயிலில் உள்ள பயணிகளின் மீது அக்கறை இல்லாமல் டிரைவர்கள் இவ்வாறு நடந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.