
வவுனியா தோணிக்கல் சிவன்கோவில் வீதியில் காணப்படும் குழாய்க் கிணறு பாவிக்க முடியாத நிலையில் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இக் குழாய்க் கிணற்றைச் சூழ நீர் தேங்கிய நிலையிலும், அசுத்தமடைந்த நிலையிலும் காணப்படும் இக்குழாய்க் கிணறு மக்கள் பாவனைக்கு ஏற்றதாக காணப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே இக் குழாய்க் கிணற்றை உரியவர்கள் திருத்தி மக்கள் பாவனைக்கு வழங்க வேண்டும் எனவும் இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.






