வவுனியா சார்பாக வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசாவால் பல பிரேரணைகள் முன்வைப்பு!!

604

DSC_0014

நேற்று (09.02.2016) நடைபெற்ற வடமாகாண சபையின் 45வது அமர்வில் வடமாகாண சபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்கள் வவுனியா சார்பாக முன்வைத்த பிரேரணைகள் வருமாறு..

01.சிறுநீரக நேயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நபர்களுக்கு வழங்கப்படும் மாதாந்தத் தொகையான 3000 ரூபா உதவிக் கொடுப்பனவு ஏனைய மாவட்டங்களுக்கு வழங்கப்படுவதுபோல் வவுனியா மாவட்டத்திலும் வழங்கப்பட வேண்டும்

02. இதேபோன்று விசேட தேவைக்கு உட்பட்டோருக்கு வழங்கப்படும் உதவிக் கொடுப்பனவுத் தொகையான 3000 ரூபாவும் ஏனைய மாவட்டங்களுக்கு வழங்கப்படுவதுபோல் வவுனியா மாவட்டத்திலும் வழங்கப்படவேண்டும்.

03. வவுனியா மாவட்டத்தில் விண்ணப்பித்த 1580 விண்ணப்பதாரர்களில் 312 பேருக்கு மட்டும் சிறுநீரக சிகிச்சை பெறுவதற்கான உதவித்தொகை வழங்கப்படுகின்றது. ஆனால் ஏனைய மாவட்டங்களில் விண்னப்பித்த முழு விண்ணப்பதாரர்களுக்கும் பணம் வழங்கப்பட்டு வருகின்றது.

ஆகவே ஏன் இந்தப் பாராமுகம் என்பது தெரியவில்லை. தற்போது வழங்கப்படும் ஒருசில விண்ணப்பதாரர்களாகிய விசேட தேவைக்கு உட்பட்டோருக்கும் 2015ம் ஆண்டு நவம்பர், டிசம்பர், மாதத்திற்ககான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை.

சிறுநீரக சிகிச்சை பெறுபவர்களுக்கும் 2015ம் ஆண்டு 7ம் மாதம்தொடக்கம் 12ம் மாதம் வரையான 6 மாதகாலப் பகுதிக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை. இக் கொடுப்பனவை பாதிக்கப்பட்ட சகலருக்கும் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மத்திய அரசின் கீழ் உள்ள சமூகசேவைத் திணைக்களத்திடம் கோரவேண்டும் என இச் சபை ஊடாக ஓர் பிரேரணையை முன்வைக்கின்றேன்.

இங்ஙனம்
மயில்வாகனம் தியாகராசா
வடமாகாண சபை உறுப்பினர்.