வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம்!!(படத்தொகுப்பு)

568

 
இலங்கைத் திருநாட்டின் வடபால் நீர் வளமும் நிலவளமும் நிறைந்த வன்னிப் பெருநிலப்பரப்பின் தலைவாசலாய் பண்டார வன்னியன் காலத்து புராதன நகராய் சைவமும் தமிழும் தழைத்தோங்கும் புண்ணிய நகராய் விளங்கும் வவுனியா மண்ணில் இருபதாம் நூற்றாண்டின் பழமையுடன் திகழும் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு பஞ்சதள இராஜ கோபுரம் சிற்பவேலைப்பாடுகள் வர்ண வேலைப்பாடுகள் சகிதம் கோடி சூரிய பிரகாசத்துடன் காட்சி தர ஆலய உட்பிரகார வேலைகள் சிறப்புற நிறைவு பெற்று,

அழகுற வர்ணம் தீட்டப்பட்டு நிகழும் மங்களம்மிகு மன்மத வருடம் தைத்திங்கள் 27ஆம் நாள் இன்று புதன்கிழமை(10.02.2016) துதியை திதியும் சதய நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய காலை 9.00 மணிமுதல் 10.30 மணிவரையான மீனலக்கின சுபவேளையில் ஸ்ரீகந்தசுவாமிப் பெருமானுக்கும், விநாயகர், சண்முகபெருமான், தட்சணாமூர்த்தி, சந்தான கோபாலர், மகாலட்சுமி, சனீஸ்வரர், வைரவர், சண்டேஸ்வரர் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிசேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பல சிவாச்சாரியார்கள் ஒன்றிணைந்து மிகச் சிறப்பாக சப்ததச (17) குண்ட மஹா கும்பாபிஷேக நிகழ்வுகளை நடாத்தினர். இன் நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

IMG_6707 IMG_6708 IMG_6710 IMG_6711 IMG_6716 IMG_6718 IMG_6719 IMG_6720 IMG_6722 IMG_6723 IMG_6726 IMG_6727 IMG_6728 IMG_6731 IMG_6734 IMG_6735 IMG_6736 IMG_6739 IMG_6740 IMG_6742 IMG_6743 IMG_6744 IMG_6745 IMG_6746 IMG_6750 IMG_6752 IMG_6753 IMG_6757 IMG_6758 IMG_6760 IMG_6761 IMG_6763 IMG_6764 IMG_6765 IMG_6766 IMG_6767 IMG_6768 IMG_6769 IMG_6770 IMG_6771 IMG_6772 IMG_6773 IMG_6774 IMG_6775 IMG_6776 IMG_6777 IMG_6778 IMG_6779 IMG_6781 IMG_6783 IMG_6785 IMG_6790 IMG_6791 IMG_6792 IMG_6793 IMG_6794 IMG_6795 IMG_6796 IMG_6797 IMG_6799 IMG_6801 IMG_6803 IMG_6804 IMG_6805 IMG_6806 IMG_6809 IMG_6810 IMG_6811 IMG_6812 IMG_6814 IMG_6815 IMG_6818 IMG_6820 IMG_6824 IMG_6828 IMG_6829 IMG_6839 IMG_6841 IMG_6851