
வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருச்செல்வம் திரேஸ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வவுனியா மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராக பதவிவகித்த சரஸ்வதி மேகநாதனுக்கு பதிலாக தற்போது திரேஸ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த திரேஸ்குமார் கடந்த 2004 – 2011 வரையிலான காலப்பகுதியில் மடு பிரதேச செயலாளராகவும், கடந்த 2011 – 2013ஆம் ஆண்டு வரை ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராகவும் பணியாற்றியிருந்தார்.
அத்தோடு, கடந்த 2014 – 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதிவரை கரைதுறைப்பற்று பிரதேச செயலாளராகப் பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்கது.






