வவுனியா பன்றிக்கெய்தகுளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் வருடாந்த இல்ல திறனாய்வுப் போட்டி பாடசாலையின் அதிபர் இ.தனபாலசிங்கம் தலைமையில் நேற்று (11.02.2016) நடைபெற்றது.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா மற்றும் சிறப்பு விருந்தினராக ஆ.நடராசா (வவுனியா மாவட்ட நிகழ்ச்சித்திட்ட இணைப்பளர்-OFERR-Ceylon) மற்றும் கெளரவ விருந்தினராக திரு.கி.மங்களகுமார் (உதவிக் கல்விப் பணிப்பாளர் -உடற்கல்வி) மற்றும் ஒமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஒமந்தை விசேட அதிரடிப்படை உயர் அதிகாரி, மற்றும் கோட்டக்கல்வி அலுவலக அதிகாரிகள், ஆசிரிய ஆலேசகர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலையின் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.






