வவுனியா கிடாச்சூரி கருவேப்பங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல திறனாய்வு போட்டிப் பாடசாலையின் அதிபர் திரு. இராசையா தேவராசா அவர்களின் தலைமையில் நேற்று (12.02.2016) நடைபெற்றது.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா, சிறப்பு விருந்தினராக திருதா.அமிர்தலிங்கம் (கோட்டக்கல்விப் பணிப்பாளர்- ஒமந்தை) மற்றும் கெளரவ விருந்தினராக வ.உதயகுலசிங்கம் (அதிபர் தனிநாயகம் அடிகளார் வித்தியாலயம், கிடாச்சூரி பாடசாலையின் முன்னாள் அதிபர்) மற்றும் கி.மங்களகுமார் (உதவிக் கல்விப் பணிப்பாளர்- உடற்கல்வி) மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், பகுதி கிராம சேவையாளர், கோட்டக்கல்வி அலுவலக அதிகாரிகள், ஆசிரிய ஆலேசகர்கள், அயல்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலையின் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.






