அண்டர்சன் உலகின் சிறந்த பந்துவீச்சாளர் –

391

andersonஇங்கிலாந்து அணி வேகப்பந்து வீரர் ஆண்டர்சன் உலகின் சிறந்த பந்துவீச்சாளர் என்று பாகிஸ்தான் முன்னாள் தலைவர் வசிம் அக்ரம் கூறியுள்ளார்.

முன்னாள் பிரபல வேகப்பந்து வீரரும், டெலிவிசன் வர்ணனையாளருமான அவர் இதுகுறித்து கூறியதாவது:–

தற்போதைய நிலையில் இங்கிலாந்து வீரர் ஜிம்மி அண்டர்சனே பந்துவீச்சில் முன்னிலையில் உள்ளார். என்னை பொறுத்தவரை அவர் தான் தற்போது உலகின் சிறந்த வேகப்பந்து வீரராக இருக்கிறார். அவரது பந்துவீச்சு எப்போதும் நேர்த்தியுடன் இருக்கிறது. புதிய பந்தையும், பழைய பந்தையும் ஒரே இலக்குடன் வீசக்கூடியவராக உள்ளார். அவரது சுவிங் பந்து வீச்சு சிறப்பாக இருக்கிறது.

ஸ்டெய்னால் ஒரு ஓவரில் ஒரு முறைதான் சுவிங் பந்து வீச முடிகிறது. ஆனால் அண்டர்சன் 6 பந்தையும் சுவிங் செய்ய கூடியது. ஸ்டெய்ன் உலகின் சிறந்த பவுலராக இருந்தாலும் அவரைவிட சற்றே முன்னணியில் ஆண்டர்சன் உள்ளார். இவ்வாறு வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

30 வயதான அண்டர்சன் 84 டெஸ்டில்320 விக்கெட் கைப்பற்றி உள்ளார். அதிக விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து வீரர்களில் இயன்போத்தம், பாப் வில்லிஸ் ஆகியோருக்கு அடுத்தப்படியாக 3–வது இடத்தில் உள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் ஆசஷ் டெஸ்ட் தொடரில் அவரது பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. 2 டெஸ்டில்13 விக்கெட் கைப்பற்றி இரண்டு டெஸ்டிலும் இங்கிலாந்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

அண்டர்சனை பாராட்டும் வாசிம் அக்ரமுக்கு சிறந்த இடதுகை வேகப்பந்து வீரர் ஆவார். அவர் 104 டெஸ்டில்414 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.