யாழ் பல்கலைக்கழக மாணவர்களிடையே குழு மோதல் – கலைப்பீட மாணவர்கள் உட்செல்லத் தடை..!

368

jaffnaயாழ் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு கலைப்பீட மாணவர்கள் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக யாழ் பல்கலைக்கழகம் நேற்று முன்தினம் முதல் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு கலைப்பீட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உட்செல்லத் தடை விதிக்கப்பட்டது.

மாணவர்கள் இடையில் ஏற்பட்ட இந்த மோதலில் நான்காம் ஆண்டு மாணவர் ஒருவர் காயமடைந்து, யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோதல் காரணமாக பல்கலைக்கழகத்தில் சில கட்டடங்களுக்கும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில மோட்டார் சைக்கிள்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன.

இதனையடுத்து கடந்த 31 ஆம் திகதி மதியத்துடன் நான்காம் ஆண்டு கலைப்பீட மாணவர்களுக்கு மீண்டும் அறிவிக்கப்படும் வரை பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கும் எனவும் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் ஏனைய பீடங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று நடைபெறுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.