வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில்!!

634

 
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்களின் ஆர்ப்பாட்டம் இன்றும் (16..02.2016) மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.

இடமாற்றம் செய்யப்பட்ட தங்களது பாடசாலை ஆசிரியரை மீண்டும் தங்களது பாடசாலைக்கே நியமனம் வழங்கக்கோரி கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள்

இது குறித்த மாணவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்..

எமது பாடசாலையில் கடமையாற்றிய உடற்கல்வி ஆசிரியர் மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை கவனம் செலுத்தி வந்தமையானது எங்களது கல்வி செயற்பாட்டிற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. எமது பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு எதிராக குறிப்பிட்ட ஆசிரியரினால் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக பழிவாங்கும் நடவடிக்கையாக இவ் ஆசிரியரை இடமாற்றம் செய்யப்பட்டார் என மாணவர்கள் தெரிவித்தனர்.

இவ் விடயம் தொடர்பாக பழைய மாணவர்கள் சங்கத்தினால் வவுனியா நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தினை கைவிட்டு வகுப்பறைகளுக்குச் சென்றனர்.

DSC01362 DSC01374 DSC01381 DSC01382 DSC01386