வவுனியா வடக்கு ப.நோ.கூ.சங்க பணியாளர்கள் மற்றும் பொதுச்சபை உறுப்பினர்கள் நெடுங்கேணி பிரதான வீதியில் இன்று (16.02.2016) காலை 08.00 மணி தொடக்கம் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா வடக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்க நிர்வாகம் பல வருடங்களாக பணியாற்றிய பணியாளர்களை தமது பதவியை தக்கவைப்பதற்காக பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் சங்க சொத்துக்களை ஈடு வைத்து வேறு தொழில் முயற்சி ஈடுபடுகின்றனர். அத்துடன் அத்தொழிலை சரியாக செய்யாமல் உள்னர்.
மேலும் சங்கத்தை திறம்பட நடாத்தாமல் அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லல் போன்ற பல பிரச்சனைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும் இதற்கான தீர்வு கிடைக்கப்பெறாமையினால் இன்று சங்க பொதுச்சபை உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து 09 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எமக்கு கருத்து தெரிவிக்கையில்..
உடனடியாக இவர்களது கோரிக்கைகளுக்கு நியாயம் வழங்கப்படும். அத்துடன் வடமாகாண சபையுடன் இணைந்து நாங்கள் இப்பிரச்சனை தொடர்பாக விசாரித்து நியாயம் வழங்குவோம். அத்துடன் இவர்களின் பிரச்சனை தொடர்பாக பொதுநோக்கு கூட்டுறவு சங்கங்களுக்கு பொறுப்பான அமைச்சருடனும் பேசி எல்லோரும் இணைந்து தீர்வை பெற்றுக்கொடுக்க உள்ளோம்.
மேலும் இவ் உண்ணாவிரத போராட்டமானது தொடர்ச்சியாக இருப்பதற்கு அனுமதிக்கமாட்டோம். இவ் உண்ணாவிரதப் போராட்டத்தின் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதனுடன்முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கமும் கலந்து கொண்டிருந்தார்.






